சனி, 12 நவம்பர், 2011

இவை இராணுவத்துக்கு அல்லஉலகின் முதல் கண்டம் விட்டு 
கண்டம் பாயும் ஏவுகணைகள்
பறவைகள் 


தெளிவு


படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை 
நீக்கியப்பிறகும் குளத்தில்
நிறைந்திருக்கிறது ஆகாயம் 


உங்களுக்கு...?இன்னுமா குட்டிப் போடவில்லை
என் மூன்றாம் வகுப்பு புத்தகத்தில்
வைத்த மயிலிறகு....


ஞாயிறு, 23 அக்டோபர், 2011

அடப்பாவமே!


பலூன்கள் குழந்தைகளுக்கு வேண்டாம்
ஊதிக் கொடுத்து ஊதிக்கொடுத்து
வாய் வலிக்கிறது

கவனித்துப் பாருங்கள்அழைப்பு ஏதும் வராதபோதும்
அடிக்கடி வெளியே எடுக்கச் சொல்கிறது
காஸ்ட்லி செல்ஃபோன்

வேண்டாம்...எல்லாம் இருக்கு...விற்பனைப் பிரதிநிதி கேட்கும் போது
மட்டும் எப்படி வீட்டில்
நிறைந்திருக்கிறது சாமான்கள்..?


வியாழன், 29 செப்டம்பர், 2011