கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 நவம்பர், 2011

இவை இராணுவத்துக்கு அல்ல



உலகின் முதல் கண்டம் விட்டு 
கண்டம் பாயும் ஏவுகணைகள்
பறவைகள் 


தெளிவு


படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை 
நீக்கியப்பிறகும் குளத்தில்
நிறைந்திருக்கிறது ஆகாயம் 


உங்களுக்கு...?



இன்னுமா குட்டிப் போடவில்லை
என் மூன்றாம் வகுப்பு புத்தகத்தில்
வைத்த மயிலிறகு....


ஞாயிறு, 23 அக்டோபர், 2011

அடப்பாவமே!


பலூன்கள் குழந்தைகளுக்கு வேண்டாம்
ஊதிக் கொடுத்து ஊதிக்கொடுத்து
வாய் வலிக்கிறது

கவனித்துப் பாருங்கள்



அழைப்பு ஏதும் வராதபோதும்
அடிக்கடி வெளியே எடுக்கச் சொல்கிறது
காஸ்ட்லி செல்ஃபோன்

வேண்டாம்...எல்லாம் இருக்கு...



விற்பனைப் பிரதிநிதி கேட்கும் போது
மட்டும் எப்படி வீட்டில்
நிறைந்திருக்கிறது சாமான்கள்..?


வெள்ளி, 9 செப்டம்பர், 2011

வன்முறை


இடிந்து கிடந்தது கட்டிடம்
சேதாரமில்லாமல் 
உள்ளே இருந்தார்
சிரிக்கும் புத்தர்

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

பேருந்து பயணம்


நேற்று இரவு அடைமழை
காலியாகக் கிடந்தன
ஜன்னலோர இருக்கைகள்

நாய்வால் (?)




டீக்கடையில் வாங்கிய பஜ்ஜியின்
எண்ணைய் உறிஞ்சிய காகிதத்தில்
லஞ்சம் வாங்கியவன் கைது!

பிரிவு


கடற்கரையில்
கால்நனைக்கத்தானேப் போனோம்
நீ ஏன் கைகழுவினாய்!!

(கருமாறா) உருமாற்றம்


வாக்கியங்களை உடைத்து
வரிசை மாற்றினால்

அட கவிதை(?)

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

புத்தாண்டு இலவசம்



முதலிரண்டு பக்கங்கள் முனைப்பாய் எழுதி

மீதி பக்கங்கள் வெறும்பக்கங்களாய் நிறைந்து கிடக்கிறது

ஒவ்வோராண்டு(ம்) டைரிகள்

புதன், 10 ஆகஸ்ட், 2011

கூடவே வந்தவன்..



உச்சிவெயில் மண்டையைப் பிளக்க
காலடியில் ஒளிந்துகொண்டது
என் நிழல்

வியர்வை




இதழுறுஞ்சி நீ குளிர்பானம்


அருந்தும்போது வியர்க்கிறது


கோப்பைக்கு

சனி, 30 ஜூலை, 2011

அழைப்பு



ஒவ்வொருமுறையும் வீட்டைப்பூட்டி வெளியே

வருகையில்தான் உள்ளிருந்து அழைக்கிறது

தொலைபேசி

தமிழ் சினிமா ஃபார்முலா


தமிழ் சினிமா ஃபார்முலா 
(எல்லாப் படங்களுக்குமானது அல்ல)
---------------------------------------------------------------
இந்தக் கவிதை(யா?)க்காக தமிழ்த்தாய் என்னை மன்னிக்க!
தூயத்தமிழில் முயன்றால் தலை கிறுகிறுக்குது,முடியல...

--------------------------------------------------------------
புதுமையானத் திரைக்கதையில் புதுப்பட தயாரிப்பு,
தினசரியில் விளம்பரம், நடித்தவர்கள் பேட்டி.
பண்டிகை நாளில் வெளியீடு.
கட்அவுட்டில் ஹீரோவுக்கு அபிஷேகம்,மலர்மாலை,
முதல்காட்சிக்கு இனிப்பு வினியோகம்.
---------------------------------------------------------------
கதைக்குள் நுழைவோம்...
விதவைத்தாயாய் முன்னாள் ஹீரோயின்.
நெற்றியில் விபூதி,கண்களில் கண்ணீர்
குடிசையில் வாசம், போட்டோவில் அப்பா.
ரீபோக் ஷூவும், ரேபேன் கண்ணாடியுமாக
கூலிவேலைச் செய்யும் மகனாக ஹீரோ.
அறிமுகப்பாட்டால் அதிரும் அரங்கு, சிதறும் நாற்காலிகள்.
வயதுக்கு மீறிய பேச்சுடன் ஃபுல் மேக்கப்பில்
பூ வியாபாரம் செய்யும் தங்கையாக வளர்ந்து வரும் நடிகை.
கல்லூரியில் படிக்கும் வில்லனின் மகள்.
வட நாட்டு இறக்குமதி,தகுதி-தமிழ் தெரியாது.
கதைப்படி குறும்புக்காரி, சுற்றிலும் தோழியர், ஊர்சுற்றல்,
ஹீரோவுடன் சந்திப்பு, முதல் சந்திப்பில் மோதல்.
வம்பு செய்யும் ரவுடியிடமிருந்து காப்பாற்றியபின் காதல்.
உள்நாட்டு லொக்கேசனில் மரத்தைச் சுற்றி பாடல்.
மகளின் காதலைத் தடுக்க வில்லனின் ஏற்பாடுகள்,
சண்டைக் காட்சியில் ஹீரோவின் டூப்பின் சாகசங்கள்.
கிளைக்கதையாய் தங்கையின் காதல்,கவர்ச்சிக் காட்சிகள்,
கர்ப்பம்,காதலன் ஏமாற்று,தற்கொலை முயற்சி.
ஹீரோ காப்பாற்றி அப்பா போட்டோ முன் சபதம்.

------------இடைவேளை----------------------------------------------

தங்கையின் பிரச்சனையால் காதலர்கள் தற்காலப்பிரிவு,
சோகம், டாஸ்மாக்கில் தண்ணியடி, தத்துவப்பாட்டு.
காதலன் நிலைகண்டு காதலி வருத்தம்,தோழியர் ஆறுதல்.
தங்கையின் காதலனைத் திருத்தி, ஊர் மெச்சத் திருமணம்.
திருமணத்தில் குத்துப்பாட்டு,பாட்டின் முடிவில்
ஹீரோ-ஹீரோயின் மீண்டும் சந்திப்பு.
வில்லனுக்குத் தெரியவர காதலியின் திருமண ஏற்பாடுகள்,
மாப்பிள்ளை வில்லனின் நண்பரின் மகன், காதலி மறுப்பு,
அதனால் வீட்டுக்குள் சிறைவைப்பு,
ஹீரோ முயற்சியில் காதலி தப்பித்தல்,
ஊர்ப்பெரியவரான கௌவரவ நடிகர் அடைக்கலம் தருதல்,
ஹீரோவுடன் ரகசிய திருமண ஏற்பாடுகள்,
டைரக்டர் போகவிரும்பிய வெளிநாட்டில் பாடல்.
கிளைமாக்ஸில் ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வில்லன்.
ஹீரோவின் தாய் கடத்தல்,தடுத்த தங்கை தாக்கப்படுதல்,
மகளை அனுப்பும்படி மிரட்ட பழைய பாக்டரியில் தாய் அடைப்பு,
காவலுக்கு மாமிச மலைகளாய் ஸ்டண்ட் நடிகர்கள்,
சுவரை உடைத்து ஹீரோ வருகை,சண்டை, ரத்தம்.
தாய் செண்டிமெண்ட் வசனம், வில்லன் திருந்துதல்,
ஹீரோ காதலியைக் கரம்பிடித்தல்,பின்னணியில் லல்லல்லா
குரூப் போட்டோவில்,டைரக்டர், தயாரிப்பாளருடன் சுபம்.
------------------------------------------------------------------
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில்,
வெளிவந்த இரண்டே நாட்களில்,
புத்தாண்டு ஸ்பெஷலாக
சின்னத்திரையில் ஒளிபரப்பு,ஸ்பான்ஸர்கள்,விளம்பரங்கள்.
------------------------------------------------------------------
மீண்டும் புதுமையானத் திரைக்கதையில் புதுப்பட தயாரிப்பு,
தினசரியில் விளம்பரம், நடித்தவர்கள் பேட்டி.
வாழ்க தமிழ் சினிமா!
நன்றி!
__________________________________________________________

செவ்வாய், 19 ஜூலை, 2011

அவளைப்போலவே நீயும்...


கதவைத் திறந்தால் உடனே பிரகாசிக்கிறாய், 


இதமாய் குளிர்விக்கிறாய்


குளிர்சாதனப்பெட்டியே!

நியாயமா?



இருட்டை விட்டுவிட்டு ஏன்


வெளிச்சத்துடன் சண்டையிடுகின்றன



கொசுக்கள்

அழுது வடிகிறது


வெளிச்சக் கண்ணீரை


வீதியில் வடித்து அழுகிறது


தெருவிளக்கு

பெயர் பொருத்தம்



கண்ணோடு உறவு


காதுடன் அரவணைப்பு 


பெயர் மூக்குக்கண்ணாடி