வியாழன், 29 செப்டம்பர், 2011

இழப்பு



மயக்க பிஸ்கட்டால்

மறைந்து போனது

இரயில் ஸ்னேகம்

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

உலர்த்தும் வெயில்


சுள்ளென்ற வெயில்
சுகமாய் கிடந்தன
தோய்த்த ஆடைகள்

வன்முறை


இடிந்து கிடந்தது கட்டிடம்
சேதாரமில்லாமல் 
உள்ளே இருந்தார்
சிரிக்கும் புத்தர்

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

பேருந்து பயணம்


நேற்று இரவு அடைமழை
காலியாகக் கிடந்தன
ஜன்னலோர இருக்கைகள்

நாய்வால் (?)




டீக்கடையில் வாங்கிய பஜ்ஜியின்
எண்ணைய் உறிஞ்சிய காகிதத்தில்
லஞ்சம் வாங்கியவன் கைது!

பிரிவு


கடற்கரையில்
கால்நனைக்கத்தானேப் போனோம்
நீ ஏன் கைகழுவினாய்!!

(கருமாறா) உருமாற்றம்


வாக்கியங்களை உடைத்து
வரிசை மாற்றினால்

அட கவிதை(?)