செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

புத்தாண்டு இலவசம்



முதலிரண்டு பக்கங்கள் முனைப்பாய் எழுதி

மீதி பக்கங்கள் வெறும்பக்கங்களாய் நிறைந்து கிடக்கிறது

ஒவ்வோராண்டு(ம்) டைரிகள்

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

திருமண நாள்



எனக்கு ஞாபக மறதி அதிகங்க. அதிலும் குறிப்பா தொலைபேசி எண்கள், பிறந்த நாள் இதெல்லாம் ஞாபகம் வச்சிக்க வேணும்னா கஷ்டம்தாங்க. என் பிறந்த நாளே எனக்கு ஞாபகம் இருக்காதுன்னா பார்த்துக்குங்களேன். அது எப்படீங்க பிறந்த நாளே மறந்து போகும் அப்படீன்னு கேட்கறீங்களா? ஏப்ரல் 3-ன்னா கண்டிப்பா ஞாபகம் இருக்கும். பங்குனி மாசம் கார்த்திகை நட்சத்திரமுன்னா எப்படிங்க ஞாபகம் இருக்கும். எங்க வீட்டில எல்லாருக்கும் பிறந்த நாள்னா பிறந்த தமிழ் மாதமும், பிறந்த நட்சத்திரமும் பார்த்துதாங்க கொண்டாடுவாங்க. வீட்டில உள்ள ஒவ்வொருத்தருக்கும் பிறந்த மாதம், நட்சத்திரத்தை ஞாபகம் வைக்கணுமுன்னா எனக்கு கொஞ்சம் கஷ்டம்தாங்க. ஆனா ஒரே ஒரு முக்கியமான நாள் மட்டும் ஆங்கில நாள்தாங்க பார்ப்போம். அது வேறு ஒண்ணுமில்லிங்க என் திருமண நாள்தாங்க. அதை மறக்க முடியுமாங்க? இல்லை மறந்துட்டுத்தான் வீட்டுக்கு வர முடியுமாங்க?


பொதுவா ஒவ்வொரு திருமண நாளுக்கும் சர்ப்பரைஸா மனைவிக்கு ஏதாவது பிரெஸண்ட் பண்ணுவேங்க. அவங்களும் அதே மாதிரி சர்ப்பரைஸா பிரெஸண்ட் பண்ணுவாங்க. நான் எப்பவும் புடவை, பொம்மை இதுமாதிரிதாங்க பிரெஸன்ட் பன்ணுவேன். இது எதுவும் இல்லைனா இருக்கவே இருக்கு கிரீட்டிங் கார்டுங்க. வீட்டுப் பக்கத்திலேயே கார்ட்ஸ் கடை இருக்குங்க. அதனால முந்தின நாள் ஆஃபிஸ் விட்டு வரும்போதே வாங்கி அடுத்த நாள் சர்ப்பரைஸாகக் கொடுத்துருவேங்க.

இது மாதிரிதாங்க எப்போதும் போல இந்த வாட்டியும் திருமண நாளுக்கு முந்தின நாள் வந்தது. இந்த வாட்டியும் முன்னாடியே பிளான் பன்ணி ஒண்ணும் வாங்கி வைக்கலீங்க. அன்னைக்குப் பார்த்து ஆஃபிஸில மீட்டிங் அதுவும் ஆஃப்டர் அவர்ஸ்ல. மீட்டிங்கில புது புராஜெக்ட்ட பத்தி பேசறான் பேசறான் ஒவ்வொருத்தனும் பேசிட்டே இருக்கிறான். எனக்கு நைட் 9 மணிக்குள்ள வந்தாதான் அட்லீஸ்ட் வீட்டுப்பக்கத்துல இருக்குற கார்டு கடையிலிருந்து வெட்டிங் அனிவெர்ஸரி கார்டாவது வாங்கி அடுத்த நாள் காலையில வைஃப்புக்கு பிரெஸண்ட் பண்ண முடியும். என் வைஃப் என்னை மாதிரி இல்ல. நல்லா ஞாபகம் வெச்சி எப்படியாச்சும் முன்னாடியே ஏதாவது வாங்கி வெச்சிருப்பாங்க. ஆனா மீட்டிங் முடிஞ்ச மாதிரி இல்ல. என் பிரெஸண்டேஷனை அஜெண்டாவில கடைசியில வெச்சிட்டான் என் அவசரம் தெரியாத கன்வீனர். ஒரு வழியா மீட்டிங் 8.15 க்கு முடிஞ்சது. ஆஃபிஸ் கன்வேயன்ஸுல வீட்டுக்கு வரதுக்கு சரியா 9.00 ஆயிடுச்சு. நான் வழியிலேயே கடை பக்கத்தில இறங்கிட்டேன். நல்ல வேளை கார்டு கடை திறந்து இருந்துச்சு. பாதிக் கதவை அடைச்சிட்டான். ஒரு வழியா உள்ளேப் போய் வெட்டிங் அன்னிவெர்ஸரி கார்ட்ஸ் எல்லாம் எங்க இருக்குங்கன்னு கேட்டேன். ‘இந்த கடைசி வரிசைக்கு வாங்க, இங்க இருக்கு’ என்று உள்ளேயிருந்து கேட்டது என் மனைவியின் குரல்.

புதன், 10 ஆகஸ்ட், 2011

கூடவே வந்தவன்..



உச்சிவெயில் மண்டையைப் பிளக்க
காலடியில் ஒளிந்துகொண்டது
என் நிழல்

வியர்வை




இதழுறுஞ்சி நீ குளிர்பானம்


அருந்தும்போது வியர்க்கிறது


கோப்பைக்கு

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அந்த ஒரு நிமிடம்...




’வாங்கி நீ ரெண்டு நாள் கூட யூஸ் பண்ண மாட்டே. அப்படியே கிடக்கும். இதே மாதிரிதான் வாக்யூம் கிளீனர் வாங்கி ரெண்டு நாள் சோபாவில அழுக்கெடுத்தே இப்ப அப்பிடியே கிடக்குது.’

’வாக்யூம் கிளீனரை நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணத்தானே வாங்கச்சொன்னேன். நீங்க ஒண்ணும் செய்யாம இருந்துட்டு என் மேல பழி போடுறீங்களா? மாலாவும், ரெமியும் வாங்கியாச்சு. நம்ம வாங்காட்டி என்ன நினைப்பாங்க?’

’ நீ செய்யுற புளிசாதத்துக்கும், தயிர்சாததுக்கும் எதுக்குடி மைக்ரோவேவ் அவன்? எலக்ட்ரிக் குக்கரே அதிகம்’

’நீங்க எதுதான் கேட்டவுடன் வாங்கித் தந்திருக்கீங்க. நான் ஒரு வேலைக்குப் போயிருந்தா ஒவ்வொண்ணுக்கும் உங்ககிட்டக் கேட்டுகிட்டே இருக்க வேண்டாம். வேலைக்கும் போக வேண்டாமுன்னுட்டீங்க’

’சரி சரி பழசையெல்லாம் கிண்டாதே. சாயங்காலம் போய் வாங்கிகிட்டு வருவோம்’

--------------------------------------------------------------------------

’என்னடி, அவன் வந்ததிலிருந்து ஒரே பாப்கார்ன்தான் வறுத்து தந்துட்டு இருக்க. வேற ஒண்ணும் செய்ய முடியாதா?’

‘இல்லீங்க, ஒவ்வொண்ணும் செய்றதுக்கு டைமரில டைம் செட் செய்யணும். அந்த மானுவலை எங்கேயோ வச்சேன். காணல.’

‘சாயங்காலம் உன் பிரண்ட்ஸையெல்லாம் கூப்பிட்டு சிக்கன் சமைக்கப் போறேன்னு சொல்லிட்டு மானுவலைக் காணோமுன்னு சொல்றியே’

‘அதெல்லாம் செஞ்சிடுவேன். கிடைக்காட்டி அதுக்கு வேற வழி வச்சிருக்கேன்’

--------------------------------------------------------------------------
‘என்ன அலமேலு, புது அவனில சிக்கன் பண்ணப் போறியா?’

‘ஆமா ராஜி. இரு இப்ப ஒரு நிமிஷத்தில வந்திடறேன்’


’ஹலோ! அவன் டீலரா? சார் நீங்க தந்த மானுவல் தொலைஞ்சுப் போச்சு. வேற கிடைக்குமா? நாளைக்குத் தானா? சரிங்க இப்ப ஒண்ணே ஒண்ணு சொல்லுங்களேன்?’

‘சொல்லுங்கம்மா’

‘ஒரு கிலோ சிக்கன் சமைக்க எவ்வளவு நேரங்க டைம் செட் செய்யணும்’

‘ஒரு நிமிடம் மேடம்’ என்று சொல்லி கடைக்காரர் புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பதுக்குள்,

‘தாங்ஸுங்க’ என்று சொல்லி டெலிபோனைக் கட் செய்தாள்.