செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அந்த ஒரு நிமிடம்...




’வாங்கி நீ ரெண்டு நாள் கூட யூஸ் பண்ண மாட்டே. அப்படியே கிடக்கும். இதே மாதிரிதான் வாக்யூம் கிளீனர் வாங்கி ரெண்டு நாள் சோபாவில அழுக்கெடுத்தே இப்ப அப்பிடியே கிடக்குது.’

’வாக்யூம் கிளீனரை நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணத்தானே வாங்கச்சொன்னேன். நீங்க ஒண்ணும் செய்யாம இருந்துட்டு என் மேல பழி போடுறீங்களா? மாலாவும், ரெமியும் வாங்கியாச்சு. நம்ம வாங்காட்டி என்ன நினைப்பாங்க?’

’ நீ செய்யுற புளிசாதத்துக்கும், தயிர்சாததுக்கும் எதுக்குடி மைக்ரோவேவ் அவன்? எலக்ட்ரிக் குக்கரே அதிகம்’

’நீங்க எதுதான் கேட்டவுடன் வாங்கித் தந்திருக்கீங்க. நான் ஒரு வேலைக்குப் போயிருந்தா ஒவ்வொண்ணுக்கும் உங்ககிட்டக் கேட்டுகிட்டே இருக்க வேண்டாம். வேலைக்கும் போக வேண்டாமுன்னுட்டீங்க’

’சரி சரி பழசையெல்லாம் கிண்டாதே. சாயங்காலம் போய் வாங்கிகிட்டு வருவோம்’

--------------------------------------------------------------------------

’என்னடி, அவன் வந்ததிலிருந்து ஒரே பாப்கார்ன்தான் வறுத்து தந்துட்டு இருக்க. வேற ஒண்ணும் செய்ய முடியாதா?’

‘இல்லீங்க, ஒவ்வொண்ணும் செய்றதுக்கு டைமரில டைம் செட் செய்யணும். அந்த மானுவலை எங்கேயோ வச்சேன். காணல.’

‘சாயங்காலம் உன் பிரண்ட்ஸையெல்லாம் கூப்பிட்டு சிக்கன் சமைக்கப் போறேன்னு சொல்லிட்டு மானுவலைக் காணோமுன்னு சொல்றியே’

‘அதெல்லாம் செஞ்சிடுவேன். கிடைக்காட்டி அதுக்கு வேற வழி வச்சிருக்கேன்’

--------------------------------------------------------------------------
‘என்ன அலமேலு, புது அவனில சிக்கன் பண்ணப் போறியா?’

‘ஆமா ராஜி. இரு இப்ப ஒரு நிமிஷத்தில வந்திடறேன்’


’ஹலோ! அவன் டீலரா? சார் நீங்க தந்த மானுவல் தொலைஞ்சுப் போச்சு. வேற கிடைக்குமா? நாளைக்குத் தானா? சரிங்க இப்ப ஒண்ணே ஒண்ணு சொல்லுங்களேன்?’

‘சொல்லுங்கம்மா’

‘ஒரு கிலோ சிக்கன் சமைக்க எவ்வளவு நேரங்க டைம் செட் செய்யணும்’

‘ஒரு நிமிடம் மேடம்’ என்று சொல்லி கடைக்காரர் புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பதுக்குள்,

‘தாங்ஸுங்க’ என்று சொல்லி டெலிபோனைக் கட் செய்தாள்.

1 கருத்து:

  1. கடைசியில் அதை சாப்பிட்டவர்கள் தான் பாவம்!!!
    நல்ல கதை...

    பலரின் அவசரத்தை இயல்பாக எடுத்துக்காட்டி இருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு